“சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர் எப்படி தவறுக்கு பொறுப்பேற்க முடியும்?” - இணை அமைச்சர் எல்.முருகன்

“சென்னை வெள்ள பாதிப்பை மறைக்கவே ஆளுநர் விவகாரத்தை பெரிதுபடுத்துகிறது திமுக; ஆளுநர் எந்த தவறும் செய்யவில்லை” - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி.
எல்.முருகன் - மு.க.ஸ்டாலின் - ஆர்.என்.ரவி
எல்.முருகன் - மு.க.ஸ்டாலின் - ஆர்.என்.ரவிபுதிய தலைமுறை
Published on

செய்தியாளர்: விக்னேஷ்முத்து

மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “சென்னை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டதை திசை திருப்பவே தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுநர் விவகாரத்தில் கருத்து தெரிவிக்கிறார்.

I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் ஒவ்வொரு முறையும் இப்படிதான் திசை திருப்ப திட்டமிடுகின்றனர். தமிழை ஐ.நா.சபை வரை கொண்டு சென்ற பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டு. ஆளுநர் நிகழ்ச்சியில் ஏதாவது கிடைக்குமா என்று தேடித்தேடி ஒரு சிறிய தவறை பெரிது படுத்தினர். தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய சிறுவர்கள் மன்னிப்பும் கேட்டு விட்டனர்.

எல்.முருகன் - மு.க.ஸ்டாலின் - ஆர்.என்.ரவி
தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடநல் திருநாடும்’ வரி புறக்கணிப்பு | மன்னிப்பு கேட்டது டிடி தமிழ்!

“திசை திருப்பவே இவ்வாறு செய்கின்றனர்...”

சென்னையில் ஒரு நாள் மழைக்கு சரியான திட்டமிடல் இல்லாததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதை திசை திருப்பவே இவ்வாறு செய்கின்றனர். கூவம் நதி உள்ளிட்ட நதிகளை சீரமைப்பு செய்யாமல் வெள்ளத்தை தடுக்க முடியாது என்ற அடிப்படை சிந்தனை கூட இல்லாமல் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர்.

ஆளுநர் ஆர்.என் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆளுநர் ஆர்.என் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்pt web

டி.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர் எப்படி அந்த தவறுக்கு பொறுப்பு ஏற்க முடியும். நாங்கள் இந்திக்கு ஆதரவாளர்களும் இல்லை, எதிரானவர்களும் இல்லை. தி.மு.க.வினர் பிழைப்புக்காக நடத்தும் இந்தி பயிலும் பள்ளி கல்லூரிகளை மூட முடியுமா?” என தெரிவித்தார்.

எல்.முருகன் - மு.க.ஸ்டாலின் - ஆர்.என்.ரவி
‘திராவிடநல் திருநாடு’ வாக்கியத்தை விடுத்து பாடியவர்கள் மீது நடவடிக்கை.. ஆளுநர் மாளிகை அறிவுறுத்தல்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com