அண்ணா பல்கலைக்கழக 42வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது பிரதமர் நரேந்திர மோடி இதில் பங்கேற்கும் நிலையில் எல்.முருகனும், பொன்முடியும் பெயர்கள் ஒரே இடத்தில் சரிசமமாக அழைப்பிதழில் இடம் பெற்று உள்ளது.
இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கும் அவர் நாளை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டம் அளிப்பு விழாவிலும் பங்கேற்கிறார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
அண்ணா பல்கலைகழகத்தின் சார்பாக அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பெயரும், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பெயரும் சரிசமமாக இடம் பெற்றுள்ளன.
இரு வாரங்களுக்கு முன்பாக காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக எல்.முருகன் பங்கேற்றதும் அழைப்பிதழில் உயர்க்கல்வித்துறை அமைச்சருக்கு முன்பு அவர் பேர் இடம் பெற்றதும் சர்ச்சை ஆனது.
அமைச்சர் பொன்முடி அந்த விழாவை புறக்கணித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இருவரது பெயர்களும் சரி சமமான அளவில் முதல்வர் பெயருக்கு கீழ் இடம் பெற்றுள்ளது. கடந்த நிகழ்வின் தாக்கத்தினாலேயே இது மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கருத்துகள் எழுந்துள்ளன.