கொலை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற அனுமதி கோரி மனு

கொலை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற அனுமதி கோரி மனு
கொலை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற அனுமதி கோரி மனு
Published on

கொலை வழக்கு குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி கேட்டு கும்பகோணம் போலீஸார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூன் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கட்டை ராஜா. இவர் மீது பட்டீஸ்வரம், கும்பகோணம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் 16 கொலை மற்றும் கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளன.

கும்பகோணம் திப்பிராஜபுரம் அருகே சென்னியமங்கலத்தில் செந்தில்நாதன் என்பவரை 2013-ல் கொலை செய்த வழக்கில் கட்டை ராஜா கைது செய்யப்பட்டார். அவருக்கு தூக்கு தண்டனையும், கூட்டாளிகளான ஆறுமுகம், செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி கும்பகோணம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், கட்டை ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி கேட்டு கும்பகோணம் போலீஸார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதே சமயத்தில், கட்டை ராஜாவின் கூட்டாளிகள் ஆறுமுகம், செல்வம் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களானது நீதிபதிகள் பி.என் பிரகாஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டைராஜா, மாரியப்பன், செல்வம் ஆகிய மூன்று பேர் மதுரை மத்திய சிறையில் இருந்து காணொலி வாயிலாக நீதிபதிகள் முன்பு ஆஜராகினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தூக்கு தண்டனை தொடர்பான வழக்குகளில் நீண்ட காலம் தாமதிக்க முடியாது எனக் கூறினர். மேலும், ஜூன் 29-ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com