குமரி: தொடர் கனமழையால் சொந்த கிராமங்களுக்குச் செல்ல முடியாமல் மலையோர மக்கள் தவிப்பு

குமரி: தொடர் கனமழையால் சொந்த கிராமங்களுக்குச் செல்ல முடியாமல் மலையோர மக்கள் தவிப்பு
குமரி: தொடர் கனமழையால் சொந்த கிராமங்களுக்குச் செல்ல முடியாமல் மலையோர மக்கள் தவிப்பு
Published on

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், மலையோர கிராம மக்கள் தங்களின் சொந்த கிராமங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் மலையோரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் இன்றும் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கோதையாறு அணையின் நீர் வரத்து அதிகமாகியுள்ளது. இதனால் அங்குள்ள மின் உற்பத்தி நிலையில் தண்ணீரை தேக்கி வைக்கும் நீரானது அதிகரித்துள்ளது.

இந்த தண்ணீரானது இன்று காலையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீரானது கோதையாற்றின் குறுக்கே மோதிரமலையிலிருந்து குற்றியார் செல்லும் பாதையில் கட்டப்பட்ட தரைமட்ட பாலத்தின் வழியே செல்கிறது.

இதனால் குற்றயர், கிளவியர், தச்சமலை, முடவன்பொற்றை உள்ளிட்ட 12 மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் மக்கள் சொந்த கிராமம் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்ற வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com