ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை முன்பு சீறி நின்ற காளையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள தேன்கனிக்கோட்டை நொகனுர், மரகட்டா, தாவரகரை வனப்பகுதிகளில் ஒற்றை யானை சுற்றி வருவது வழக்கம். இந்த காட்டு யானை அருகில் உள்ள விவசாய நிலங்களில் நுழைந்து அவ்வப்போது விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது.
இந்த நிலையில் தாவரகரை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் மாடுகள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த ஒற்றை காட்டு யானை ஆக்ரோஷமாக மாடுகளை விரட்டியது. அப்போது அங்கிருந்த காளை மாடு ஒன்று காட்டு யானையை காண்டு அஞ்சாமல் தனது முன்னங்கால்களால் நிலத்தை கிளறியபடி எதிர்த்து நின்றது.
இதைக்கண்டு அமைதியாக நின்றிருந்த காட்டு யானையும் காளை மாடும் அங்கிருந்து வேறுவேறு திசைகளில் திரும்பிச் சென்றன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.