கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறக்க வாய்ப்பு!

கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறக்க வாய்ப்பு!
கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறக்க வாய்ப்பு!
Published on

கோயம்பேடு சந்தையை திறக்குமாறு முதல்வரிடம் வணிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் கோயம்பேடு சந்தையின் அனைத்து சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் நேற்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினர். அப்போது கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளை திறக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’ கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேல் வணிகம் முடக்கப்பட்டு, வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. எனினும் அரசு எடுத்த அனைத்து முடிவுகளிலும், வணிகர்களை ஒருங்கிணைத்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அரசின் பணிகளுக்கு எவ்வித குறுக்கீடும், இடையூறும் கொடுக்காமல் தொற்று கட்டுக்குள் கொண்டுவர அரசோடு இணைந்து அனைத்து முயற்சிகளிலும் துணை நின்றிருக்கிறது.

எனவே கோயம்பேடு காய்கறி, பூ, பழம் மற்றும் உணவு தானிய வணிக வளாகத்தை தூய்மை செய்து மீண்டும் திறக்க வேண்டும். மாநிலம் முழுவதும் முடக்கி வைக்கப்பட்டுள்ள காய்கறி, பூ, பழம், மீன், இறைச்சி சந்தைகள் மற்றும் வாரச் சந்தைகள் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை மனு அளித்தோம்.

முதல்வர் பழனிசாமி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உடனடியாக எங்களது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, கோயம்பேடு சந்தை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காய்கறி, பூ, பழம், மீன், இறைச்சி சந்தைகள், வாரச்சந்தைகளை மீண்டும் விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com