கோயம்பேடு காய்கறி சந்தை நாளை இயங்கும் !

கோயம்பேடு காய்கறி சந்தை நாளை இயங்கும் !
கோயம்பேடு காய்கறி சந்தை நாளை இயங்கும் !
Published on

கோயம்பேடு காய்கறி சந்தை நாளை வழக்கம் போல் இயங்கும் என்று காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 370 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி இன்று இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை சுய ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை சென்னை மாநகரில் 50 சதவித பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று ஒருநாள் கோயம்பேடு காய்கறி சந்தை இயங்கவில்லை. ஆனால் நாளை காய்கறி சந்தை வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. மேலும் இந்த உத்தரவை மார்ச் 31 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இது குறித்து தமிழக அரசு தன்னுடைய முடிவை இன்று அல்லது நாளை காலை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை மார்ச் 31 ஆம் தேதி வரை இயங்காது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் மார்ச் 31 ஆம் தேதி வரை மெட்ரோ ரயில்கள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com