கோவை கோட்டத்தில் மட்டும் எழுபத்தொரு கல்லூரிகள் உரிய அனுமதியின்றியும் அங்கீகாரமின்றியும் செயல்படுகின்றன என்ற அதிர்ச்சிச் செய்தி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
கோவையில் இருபத்தைந்தாயிரம் சதுர அடி வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு உள்ளூர் திட்ட குழுமத்திலும் புறநகர்ப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு நகர ஊரமைப்பு மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். இருபத்தைந்தாயிரம் சதுர அடிக்கு மேல் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு மேற்கண்ட நிர்வாகம் மூலமாக சென்னையில் உள்ள நகர ஊரமைப்பு ஆணையர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். இதில் கோவை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நகர ஊரமைப்பு மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் மட்டும் அனுமதி பெறாமல் இயங்கும் கல்லூரிகள் எத்தனை என சமூக ஆர்வலர் டேனியல் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்தார்.
அதில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நீலகிரி என மேற்கண்ட அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் சுமார் எழுபத்தொரு கல்லூரிகள் உரிய அனுமதியின்றி செயல்படுவதாக தெரியவந்துள்ளது.