கூடலூர்: தனி அறைகளாக இல்லாமல் அருகருகே கட்டப்பட்ட கழிப்பறை.. அதிகாரி சொன்ன விளக்கம்!

கூடலூர்: தனி அறைகளாக இல்லாமல் அருகருகே கட்டப்பட்ட கழிப்பறை.. அதிகாரி சொன்ன விளக்கம்!
கூடலூர்: தனி அறைகளாக இல்லாமல் அருகருகே கட்டப்பட்ட கழிப்பறை.. அதிகாரி சொன்ன விளக்கம்!
Published on

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தனி அறைகளாக இல்லாமல் அருகருகே கட்டப்பட்டுள்ள கழிப்பறையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ள இடத்தில் ஆறு லட்ச ரூபாய் மதிப்பில் பொது கழிப்பறையை சீரமைத்து கட்டியுள்ளனர். ஏற்கனவே உள்ள கழிப்பறை கட்டடத்திற்கு வர்ணம் மட்டும் பூசி விட்டு, அதை ஒட்டி சிறிய அளவிலான கழிப்பறையை ஒப்பந்ததாரர் கட்டி உள்ளார். மற்றும் தனி அறைகளாக இல்லாமல் அருகருகே திறந்தவெளியில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெல்லியாளம் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் பிரான்சிஸ் சேவியரிடம் கேட்டபோது, குழந்தைகளுக்காக கழிப்பறை
கட்டப்பட்டுள்ளதாக கூறினார். மூடப்பட்ட அறைகளுக்குள் குழந்தைகள் சென்றால் அச்சப்படுவார்கள் என்பதற்காக இவ்வாறு திறந்தவெளியில் கட்டப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் கழிப்பறை கட்ட ஆறு லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே உள்ள கழிப்பறை கட்டடத்தை அப்புறப்படுத்தி விட்டு புதிய கழிப்பறை கட்டடம் கட்ட உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com