கர்நாடகா எல்லைக்கு சென்றது கோதண்டராமர் சிலை !

கர்நாடகா எல்லைக்கு சென்றது கோதண்டராமர் சிலை !
கர்நாடகா எல்லைக்கு சென்றது கோதண்டராமர் சிலை !
Published on

பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை பல சிக்கல்களையும் தடைகளையும் கடந்து கர்நாடகா எல்லைப் பகுதியான அத்திப்பள்ளி பகுதியை அடைந்ததுள்ளது.

பெங்களூரு அருகே ஈஜிபுரா என்ற இடத்தில் நிறுவுவதற்காக திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டை பகுதியில் வடிவமைக்கப்பட்டது. 350 டன் எடை கொண்ட பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை கொண்டு செல்லப்படுகிறது. பல தடைகளை கடந்து இந்தச் சிலை மெல்ல பயணப்பட்டு தற்போது கர்நாடகா எல்லைப் பகுதியான அத்திப்பள்ளி பகுதியை அடைந்ததுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கொரக்கோட்டை மலையில் இருந்து 380 டன் எடைக்கொண்ட ஒரே கல்பாறையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது கோதண்டராமர் சிலை. கடந்தாண்டு டிசம்பர் 7ம்தேதி முதல் மிகபெரிய கார்கோ லாரியில் பெங்களூர் ஈஜிபுரா பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 31ம்தேதி கோதண்டராமர் சிலை கிருஷ்ணகிரிக்கு சென்றது. பின்னர் அங்கிருந்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இணைந்து  ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி பகுதியில் கோதண்டராமர் சிலை வாகனம் நிறுத்தபட்டது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் சிலையைக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், கடந்த 13 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கோதண்டராமர் சிலையானது தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மண் பாதையின் மூலமாக ஆற்றை கடந்து ஓசூர் பேருந்து நிலையம் வழியாக கார்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளிக்கு சென்றது.

இந்த பிரம்மாண்ட கோதண்டராமர் சிலையை காண ஓசூர் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரண்டு வந்து, அதனை தொட்டு வணங்கி சென்றனர். தொடர்ந்து பாதுகாப்புடனும் இந்த பிரம்மாண்ட சிலை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் பெங்களூர் நோக்கி நகர்த்தப்பட்டு வருகிறது. தமிழக எல்லையான ஜுஜுவாடி பகுதியை கடந்து கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளி பகுதிக்கு சென்றபோது, அங்கு ஏராளமான பொதுமக்கள் வந்து சிலையை வழிபட்டனர். மேலும் நாளை மறுநாள் மாலை பெங்களூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அதில் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஆட்சியர்கள் பங்கேற்பதாக சிலை கொண்டு செல்லும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com