கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தனது ஜாமீனை ரத்து செய்யக் கோரி வாளையார் மனோஜ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில், கேரளாவைச் சேர்ந்த மனோஜ் கைது செய்யப்பட்ட நிலையில், உதகையில் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
உதகையில் தனக்கு இருப்பிடமும், உணவும் கிடைக்கவில்லை என்று கூறி ஜாமினில் தளர்வு அளிக்குமாறு மனோஜ் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் புலன் விசாரணை என்ற பெயரில் அரசு தரப்பு காலம் தாழ்த்துவதால், ஜாமினை ரத்து செய்து சிறையில் அடைக்குமாறு வாளையாறு மனோஜ் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிபதி மனோஜின் மனுவை தள்ளுபடி செய்தார்.