கொடைக்கானல் கோடை விழாவில் கால்நடைத்துறை சார்பாக நடைபெற்ற நாய்கள் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கோடை விழா, கடந்த மே 24 ஆம் தேதி மலர்க்கண்காட்சியுடன் துவங்கியது. நேற்றுடன் ஆறு நாட்கள் நடைபெற்று முடிவுற்ற மலர்க்கண்காட்சியை தொடர்ந்து, இன்று கால்நடைத்துறை சார்பாக நாய்கள் கண்காட்சி மற்றும் திறன் போட்டி நடந்தது.
இதில், கெர்மன் செப்பர்டு, லேபர் டாக், ராட்வைலர், பொமேரியன், டாபர் மேன், பக், கோல்டன் ரெட்ரீவர் உள்ளிட்ட பதினாறுக்கும் மேற்பட்ட நாய் வகைகள் பங்கு பெற்றன. இதில் நாய்களின் ஒடும் திறம், கீழ்படியும் தன்மை, மோப்ப சக்தி உள்ளிட்ட பல்வேறு திறமைகள் அடிப்படையில் சிறந்த நாய்களை தேர்தெடுத்து நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பிரயண்ட் பூங்காவில் நடந்த இந்த கண்காட்சியை, ஏராளமான சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்து, நாய்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.