கொடைக்கானல் கோடை விழா: மலர் கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர்கள்

கொடைக்கானல் கோடை விழா: மலர் கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர்கள்
கொடைக்கானல் கோடை விழா: மலர் கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர்கள்
Published on

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குதுகலமாக துவங்கிய கொடைக்கானல் கோடை விழாவில், லட்சக்கணக்கான வண்ண வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 58வது மலர் கண்காட்சி கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அதன் பின்னர் கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடை விழா நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கோடை விழா இன்று மலர் கண்காட்சியுடன் துவங்கியது.

இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மலர் கண்காட்சியை துவக்கி வைத்தனர். தொடர்ந்து வண்ண வண்ண மலர்களை சுற்றுலா பயணிகளுடன் இணைந்து அமைச்சர் பெருமக்களும் கண்டு ரசித்தனர்.

இன்னும் தொடர்ந்து 5 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெற உள்ளதால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் மலைப் பகுதியை நோக்கி வருவார்கள் என சுற்றுலாத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலாவை மட்டும் நம்பியுள்ள கொடைக்கானல் வாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com