“சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கக்கூடாது”- கொடைக்கானலில் ஏராளமானோர் போராட்டம்

“சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கக்கூடாது”- கொடைக்கானலில் ஏராளமானோர் போராட்டம்
“சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கக்கூடாது”- கொடைக்கானலில் ஏராளமானோர் போராட்டம்
Published on

சுற்றுலாப்பயணிகள் வர தடை விதிக்கக்கூடாது என வலியுறுத்தி கொடைக்கானலில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுற்றுலா என்றாலே ஏப்ரல், மே மாதங்களும், கொடைக்கனல், ஊட்டி, நீலகிரி, ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களும்தான் நினைவுக்கு வரும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. இதில் சுற்றுலா தலங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்தனர். அதன்பிறகு சில மாதங்களுக்கு முன்பு அரசு தளர்வு விதித்ததால் தற்போதுதான் மீண்டு வந்தனர்.

ஆனால் மீண்டும் இந்தியா முழுவதும் கொரோனா 2ஆம் அலை வீசி வருகிறது. இதனால் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாத்தலங்கள், கோயில்கள், பூங்காக்கள் ஆகியவற்றிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுற்றுலாப்பயணிகள் வர தடை விதிக்கக்கூடாது என வலியுறுத்தி கொடைக்கானலில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளை அடைத்தும், வாகனங்களை இயக்காமலும் குடும்பத்துடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com