பெண்மையை இழிவுபடுத்தியதற்காகவா சுப்பையாவுக்கு எய்ம்ஸ் உறுப்பினர் பதவி?: மாணிக்கம் தாகூர்

பெண்மையை இழிவுபடுத்தியதற்காகவா சுப்பையாவுக்கு எய்ம்ஸ் உறுப்பினர் பதவி?: மாணிக்கம் தாகூர்
பெண்மையை இழிவுபடுத்தியதற்காகவா சுப்பையாவுக்கு எய்ம்ஸ் உறுப்பினர் பதவி?: மாணிக்கம் தாகூர்
Published on

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக கீழ்பாக்கம் மற்றும் ராயப்பேட்டை புற்றுநோயியல் அறுவை சிகிச்சை மருத்துவர் நியமிக்கப்பட்டிருப்பது பெண்மையை இழிவுபடுத்தியதற்காக கொடுக்கப்படும் பரிசா என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ட்விட் செய்துள்ளார். 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.எம். கட்டோச் நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே போல அதே போல கிண்டி டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவமனை துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷயன் மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை  புற்றுநோயியல் அறுவைசிகிச்சைப் பிரிவு மருத்துவர் சுப்பையா ஆகியோர் உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக மருத்துவர் சுப்பையா கார் நிறுத்துவது தொடர்பாக, தனது வீட்டின் அருகில் வசித்து வந்த பெண் ஒருவருடன் தகராறில் ஏற்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்ததோடு மட்டுமல்லாமல் பயன்படுத்திய முக கவசங்களை விட்டுச்சென்றதாக புகார் எழுந்தது. இந்தப் பிரச்னை பூதாகாரமாக வெடித்த நிலையில், இரு தரப்பு பேச்சு வார்த்தையின் கீழ் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 

இந்நிலையில் இந்தப் புகாரை முன் வைத்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவர் RSS உறுப்பினர் என்பதற்காகவா அல்லது பெண்மையை இழிவுபடுத்தியதற்காக கொடுக்கப்படும் பரிசா? இது தான் மனுசாஸ்த்திரத்தின் வழி ஆட்சியோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் அவரை உடனே எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மருத்துவர் ஹர்ஷ் வர்தனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com