சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையொன்றின்மீது மயங்கி விழுந்திருந்த நபரொருவரை, காவல் ஆய்வாளர் தோளில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை தற்போது காலை வரை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. மழை காரணமாக மக்கள் பலருக்கும் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. அந்தவகையில் தெருவோரங்களில் வசிப்போருக்கு இம்மழை கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கிடைக்கும் இடங்களில் படுத்துறங்கி தங்களின் வாழ்வை நகர்த்துகின்றனர் அம்மக்கள். அந்தவகையில் சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வரும் உதயா என்பவர் கனமழை காரணமாக கல்லறைக்குள்ளேயே தங்கி இருந்திருக்கின்றார்.
கனமழை தொடர்ந்த காரணத்தால் உதயா உடல் நிலை பாதிக்கப்பட்டு அங்கேயே மயக்கமாகி இருக்கிறார். அவரை அங்கு கண்ட அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அங்கு சென்று, முறிந்து விழுந்த மரங்களை அகற்றி உதயாவை தனது தோளில் வைத்து ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். காவல் ஆய்வாளர் அவரை தூக்கி செல்லும் காட்சி, பார்ப்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மீட்பு பணியில் காவல்துறையினர் <a href="https://t.co/3kUBg8T0h6">pic.twitter.com/3kUBg8T0h6</a></p>— ரமேஷ்முருகேசன் (@rameshibn) <a href="https://twitter.com/rameshibn/status/1458688507275186176?ref_src=twsrc%5Etfw">November 11, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>