கிட்னி திருட்டு குறித்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், கிட்னி திருட்டு சம்பவங்கள் தொடர்பாக புரோக்கர்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், இதுகுறித்து தமிழகத்தில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், கிட்னி திருட்டு சம்பவங்கள் தொடர்பான விசாரணையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும், பணத்திற்காக கிட்னியை விற்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு ஏழை எளிய மக்களின் கிட்னி திருடப்படுவது அதிர்ச்சியளிக்கிறது, அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.