‘உடலுறுப்புகள் திருட்டா?’ மறுப்புடன் விளக்கமளித்த மருத்துவமனை!

‘உடலுறுப்புகள் திருட்டா?’ மறுப்புடன் விளக்கமளித்த மருத்துவமனை!
‘உடலுறுப்புகள் திருட்டா?’ மறுப்புடன் விளக்கமளித்த மருத்துவமனை!
Published on

கேரள முதலமைச்சர் தமிழக முதலமைச்சருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், சேலம் மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கில்லிகுரிஷி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஓட்டுநரகாக இருந்த இவர், 6 பேருடன் சென்னைக்கு வந்துள்ளார். அப்போது தருமபுரி நான்கு வழிச்சாலை மீனாட்சிபுரம் அருகே அவர்கள் வந்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மே 22ஆம் தேதி மணிகண்டன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம், உறவினர்களிடம் தெரிவித்துள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக மணிகண்டன் உறவினர்கள் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் புகார் அளித்துள்ளனர். அதில், சேலம் மருத்துவமனை மணிகண்டன் சிகிச்சைக்கு மருத்துவக் கட்டணமாக ரூ.3.25 லட்சம் கேட்டது. அவ்வளவு உடனே பணத்தை தரமுடியாத சூழல் ஏற்படவே, கட்டாயமாக கையெழுத்தை பெற்றுக்கொண்டு மணிகண்டன் உடலுறுப்புகளை எல்லாம் எடுத்துக்கொண்டது. உடலுறுப்புகளை எடுத்துக் கொண்டதற்கு முறையான சான்றிதழ்களை வழங்கவில்லை” என குற்றஞ்சாட்டியிருந்தனர். 

இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “உடலுறுப்புகளை பறித்ததாக என்னிடம் கேரளா பாலக்காட்டை சேர்ந்த குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த மிருகத்தனமான செயலை செய்த அந்த மருத்தவமனைக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக்கொண்டார். மேலும் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமிக்கு, பினராயி விஜயன் கடிதமும் எழுதியுள்ளார். 

இந்நிலையில் தங்கள் நிர்வாகம் மீது எழுந்த குற்றச்சாட்டுகளை மருத்துவமனை நிர்வாகம் முழுவதும் மறுத்துள்ளது. அவர்களின் விளக்கத்தில் “முற்றிலும் தவறான குற்றசாட்டு. சட்டத்திற்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் முறைப்படி ஒப்புதல் பெற்ற பின்னரே, உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டது. தானமாக பெறப்பட்ட உடலுறப்புகள் அனைத்தும் உடலுறுப்பு மாற்று மையத்தின் வழிகாட்டுதல்படி அந்தந்த மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. 1992 மத்திய சட்டம் 42 கீழ்தான் உடலுறுப்பு தானம் பெறப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய மணிகண்டன் கடந்த 18ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 22ஆம் அவர் மூளைச்சாவு அடைந்ததை அவர்களின் உறவினர்களின் தெரிவித்தோம். மூளைச்சாவு அடைந்ததாற்கான சான்றிதழ்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.” என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறைக்கு அளித்த விளக்க விண்ணப்பத்தையும் புதிய தலைமுறையிடம் பகிர்ந்துள்ளது.

(தகவல்கள் : மோகன்ராஜ், புதிய தலைமுறை செய்தியாளர், சேலம்)

தொடர்புடைய முந்தைய செய்தி : https://goo.gl/mitBo8

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com