முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மதியத்திற்கு மேல் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என காவேரி மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடந்த 12ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் 14ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு குறைவான அளவு தொற்று ஏற்பட்டதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என காவிரி மருத்துவமனையின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது. முதலமைச்சருக்கு தொற்று பாதிப்பு குறைந்தாலும் வீடு திரும்புவதற்கு மாலை ஆகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் இன்று காலை நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என காவேரி மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. முதலமைச்சருக்கு குணமடைந்தாலும் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் நாளை முதல் அரசு விழாக்களில் முதலமைச்சர் பங்கேற்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதையும் படிக்கலாம்: 'விவாதிக்க வேண்டிய விவகாரங்கள் நிறைய இருக்கிறது' - சபாநாயகரிடம் வலியுறுத்திய எதிர்கட்சிகள்