5வது முறையாக ஒத்திவைக்கப்பட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல்.. கரூரில் மீண்டும் பரபரப்பு

5வது முறையாக ஒத்திவைக்கப்பட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல்.. கரூரில் மீண்டும் பரபரப்பு
5வது முறையாக ஒத்திவைக்கப்பட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல்.. கரூரில் மீண்டும் பரபரப்பு
Published on

கரூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற காரணத்தால் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் மீண்டும் ஐந்தாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட ஊராட்சியில் மொத்தமுள்ள 12 உறுப்பினர்களில் திமுகவிற்கு 6 உறுப்பினர்களும் அதிமுகவிற்கு 6 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த ஊராட்சியின் துணைத் தலைவராக இருந்த முத்துக்குமார் துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவியை ராஜினார் செய்துவிட்டு கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.

இதையடுத்து துணைத் தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த இடத்திற்கு தேர்தல் நடைபெற்று உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்காக நான்கு முறை தேர்தல் அறிவிக்கப்பஎட்டு, ஒவ்வொரு முறையும் உரிய கோரமில்லாததால் 4 முறையும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், 5 வது முறையாக இன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக உறுப்பினர்கள் ஆறு பேரும் ஒரே காரில் மாவட்ட ஊராட்சி கூட்ட அறைக்கு வந்தனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுவதை அறிந்த 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு திரண்டிருந்தனர்.

இதையடுத்து மாவட்ட ஊராட்சி அரங்கில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதாக அறிவித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்து. இதைக் கண்டித்து உடனடியாக 6 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களும் கூட்ட அரங்கு முன்பு அமர்ந்து சிறிது நேரம் தர்ணா போராட்டம் செய்தனர். பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்னாள் அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியளித்தார்.

எம்ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், “அதிமுக மாவட்ட ஊராட்சி பெண் கவுன்சிலர் கணவரை பொய் வழக்கில் கைது செய்துளள்ளனர். திமுகவுக்கு வந்தால் வழக்கை வாபஸ் பெற்றுவிடுவதாக மிரட்டுகின்றனர். மாவட்ட ஊராட்சி தலைவர் கண்ணதாசனை கைது செய்வதாக திமுகவினர் மிரட்டுகின்றனர்.

இன்று சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் எனக் கூறி துணைத் தலைவர் தேர்தலை ஒத்தி வைத்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திமுகவுக்கு 6 உறுப்பினர்கள், அதிமுகவுக்கு 6 உறுப்பினர்கள் உள்ளனர். சட்டப்படி தேர்தல் நடத்துங்கள் யார் வெற்றி பெற்றாலும் ஏற்றுக் கொள்கிறோம். அதிமுக மாவட்ட கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர்களை திமுகவினர் விரட்டுகின்றனர். நியாயமாக தேர்தலை நடத்துவோம் என்றார் மாவட்ட ஆட்சியர். இதுதான் நியாயமா? மாவட்ட நிர்வாகம் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com