கருணாநிதி நினைவிடத்தில் 40க்கு 40 பூ அலங்காரம்

கருணாநிதி நினைவிடத்தில் 40க்கு 40 பூ அலங்காரம்
கருணாநிதி நினைவிடத்தில் 40க்கு 40 பூ அலங்காரம்
Published on

திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் 40க்கு 40 என்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு நிறைவுற்ற நிலையில், நேற்று திமுகவின் தென்மண்டல மாநாடு விருதுநகரில் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் ரோஜா மலர்களால் 40க்கு 40 என அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக 40 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்ததுபோல, இந்தத் தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கம் திமுகவினரிடம் உள்ளது. 

அதுமட்டுமல்லாமல், கருணாநிதி உயிரிழ‌ந்த பிறகு நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் என்பதோடு, ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற உள்ள தேர்தல் என்பதால் திமுகவினர் இந்தத் தேர்தலை முக்கியம் வாய்ந்ததாகக் கருதுகின்றனர். முன்னதாக, கருணாநிதி இல்லாத பிறந்த நாளை தான் கொண்டாட விரும்பவில்லை என மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்திருந்தார். அத்துடன், 40 தொகுதிகளை வென்று அதனை கருணாநிதியின் பாதத்தில் சமர்ப்பிப்பதே தொண்டர்கள் தனக்கு தரும் பிறந்த நாள் பரிசாக இருக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com