கர்நாடகா - தமிழக எல்லை: திம்பம் சோதனைச்சாவடியில் நுழைவுக்கட்டணம் ரத்து

கர்நாடகா - தமிழக எல்லை: திம்பம் சோதனைச்சாவடியில் நுழைவுக்கட்டணம் ரத்து
கர்நாடகா - தமிழக எல்லை: திம்பம் சோதனைச்சாவடியில் நுழைவுக்கட்டணம் ரத்து
Published on

கர்நாடகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் திம்பம் சோதனைச்சாவடி வழியாக தலமலை, தாளவாடி செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த கட்டணம் ரத்து செய்யப்படுவதாக சத்தியமங்கலம் மாவட்ட வனஅலுவலர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக பொதுமுடக்கம் காரணமாக தமிழக வாகனங்கள் புளிஞ்சூர் சோதனைச்சாவடி வழியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக பேருந்துகள், சரக்கு மற்றும் காய்கறி வாகனங்கள் கர்நாடகத்தில் நுழையாமல் தமிழக பகுதியான திம்பம் சோதனைச்சாவடி தலமலை வழியாக தாளவாடிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. மாற்று வழியான திம்பம் சோதனைச்சாவடி வழியாக செல்வதற்கு தலமலை வனத்துறை நுழைவுக்கட்டணம் வசூலித்தனர்.

கர்நாடகத்தில் ஊரடங்கு என்பதால் அத்தியவசிய தேவைக்கு மட்டுமே தலமலை சாலையை பயன்படுத்துவதால் ஒவ்வொரு முறையும் நுழைவுக்கட்டணம் செலுத்தமுடியாது என மலைக்கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கர்நாடகத்தில் பொதுமுடக்கம் முடியும் வரை திம்பம் சோதனைச்சாவடியில் நுழைவு கட்டணம் வசூல் ரத்து செய்யப்படுவதாக சத்தியமங்கலம் மாவட்ட வனஅலுவலர் கிருபா சங்கர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com