கர்நாடகா: ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்த 45,000 கோழிகள்

கர்நாடகா: ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்த 45,000 கோழிகள்
கர்நாடகா: ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்த 45,000 கோழிகள்
Published on

கர்நாடக மாநிலம் துமகூரு அருகே பண்ணைக்குள் மழைநீர் புகுந்ததால் 45 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தன.

கர்நாடக மாநிலம் துமகூரு அருகே எலடஹள்ளி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் நாராயணப்பா என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணைக்குள் தண்ணீர் புகுந்தது.

இதில், அந்த கோழி பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 45 ஆயிரம் கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன. இதையடுத்து மறுநாள் கோழி பண்ணைக்கு சென்ற நாராயணப்பா இறந்து கிடந்த கோழிகளை பார்த்து கவலையடைந்தார்.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த கோழிகளை பார்வையிட்டு நாராயணப்பாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மழை நீரில் மூழ்கி பல லட்சம் மதிப்பிலான கோழிகள் உயிரிழந்தது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com