கராத்தே மாஸ்டர் to சரித்திரப் பதிவேட்டு குற்றவாளி.. யார் இந்த சீசிங் ராஜா?

கராத்தே மாஸ்டராக வாழ்க்கையைத் தொடங்கிய ராஜா, சீசிங் ராஜாவாக மாறியது எப்படி? சரித்திரப்பதிவேட்டு குற்றவாளியானதற்கு என்ன காரணம்?
சீசிங் ராஜா
சீசிங் ராஜாpt web
Published on

சீசிங் ராஜா

48 வயதான சீசிங் ராஜா, சரித்திர பதிவேட்டில் ஏ பிளஸ் குற்றவாளியாக பட்டியலிடப்பட்டவர். ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட நரசிம்மன் - அங்கம்மா தம்பதியின் மகனான இவர், 9 ஆம் வகுப்பு வரையே படித்துள்ளார். கராத்தே கற்று, பின்னாளில் கராத்தே மாஸ்டராக மாறிய ராஜா, நண்பர்களுக்காக அடிக்கடி அடிதடி செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல்துறையினர், சீசிங் ராஜா
என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல்துறையினர், சீசிங் ராஜாpt web

வாகனக் கடன் கொடுக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ராஜா,. கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களிடம் இருந்து அடாவடியாக வாகனங்களை பறிமுதல் செய்வதை வேலையாகக் கொண்டிருந்தார். மிரட்டி வாகனங்களை சீஸ் செய்வதில் கில்லாடி என்பதால் கராத்தே ராஜாவாக இருந்தவர் சீசிங் ராஜா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். அந்த வேலைக்குப்பிறகு பணம், நிலம் சீஸ் செய்துவந்ததால் அந்த பெயர் அப்படியே நிலைத்துவிட்டது.

அப்போதே தாம்பரம் மார்க்கெட் பகுதியில் கோலோச்சிய பிரபல ரௌடியுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட ராஜா, மாமூல் வசூலிப்பது, ரியல் எஸ்டேட் கட்டப்பஞ்சாயத்து செய்வது என ரௌடி சாம்ராஜ்ஜியத்துக்குள்ளும் காலடி வைத்தார்.

சீசிங் ராஜா
டெல்லி | சிவில் சர்வீஸுக்குப் படித்த ராஜஸ்தான் மாணவர்! 10 நாட்கள் காணாமல்போன நிலையில் சடலமாக மீட்பு!

30க்கும் மேற்பட்ட வழக்குகள்

ஆந்திராவில் இரட்டை கொலை வழக்கில் முக்கிய நபராக தேடப்பட்டு வந்த நிலையில், பெரும் ரவுடியாக உருவெடுத்த சீசிங் ராஜா சென்னை மற்றும் ஆந்திராவில் கொலை செய்து கூலிப்படை தலைவனாக மாறினார். ஆந்திராவில் 2 முறை கைது செய்யப்பட்டுள்ள சீசிங் ராஜா, தாம்பரம், குன்றத்தூர், படப்பை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் உள்ளிட்ட தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட போது, சீசிங் ராஜாவிடம் நவீன ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 கொலை உட்பட கொலை முயற்சி, ஆட்கடத்தல், பணம் பறித்தல் என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. ஐந்து முறை குண்டர் சட்டத்தின் கீழ் ரவுடி சீசிங் ராஜா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

காவல்துறையின் நெருக்கடி காரணமாக ஆந்திராவில் இவரது துணைவிகள் வீட்டில் பதுங்கியபடி சென்னையில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

சீசிங் ராஜா
”எங்க டா அந்த மஞ்ச சாரீ..” விஜய்-த்ரிஷா நடனத்தில் பட்டைய கிளப்பிய ’மட்ட’ பாடல் வீடியோ வெளியீடு!

சரித்திரப் பதிவேட்டு குற்றவாளி

கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய கூலிப்படை தலைவனாக உருவெடுத்த சீசிங் ராஜா, ரியல் எஸ்டேட் தொழிலிலும் கால் பதித்து ஆட்களை கடத்தி பணம் கேட்டு மிரட்டும் செயலிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்

சரித்திர பதிவேடு குற்றவாளியான இவரை தேடப்படும் முக்கிய குற்றவாளியாக செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 20 ஆம்தேதி அறிவித்தது. இதையடுத்து சீசிங் ராஜா படம் இடம்பெற்ற போஸ்டர்களை ஒட்டி காவல்துறையினர் தேடி வந்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷின் கூட்டாளி என்பதாலும் சீசிங் ராஜா தேடப்பட்டு வந்தவராக இருந்த நிலையில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.

சீசிங் ராஜா
கராத்தே.. அடிதடி To ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு| யார் இந்த சீசிங் ராஜா? என்கவுன்ட்டர் நடந்தது எப்ப்டி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com