மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 3 சாமி சிலைகள் காணாமல் போது தொடர்பாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த ராகு, கேது மற்றும் புன்னைவன நாதர் சிலைகள் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக வேறு சிலைகள் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2004/ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில், கடத்தப்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ஸ்தபதி முத்தையா, இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் ஆகியோரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2004-ம் ஆண்டு கோவிலில் பணிபுரிந்த அர்ச்சகர்கள் உள்பட 36 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.