கன்னியாகுமரி: மனநல காப்பகத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கன்னியாகுமரி: மனநல காப்பகத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கன்னியாகுமரி: மனநல காப்பகத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

கன்னியாகுமரி அருகே தனியார் மனநல காப்பகத்தில் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மந்தாரம்புதூர் என்ற இடத்தில் மனோலய என்ற மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தை நடத்தி வரும் நிர்வாகிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது அவருக்கு கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து உடனடியாக அவர் நடத்தி வரும் மனநல காப்பகத்தில் இருந்த 80-க்;கும் மேற்பட்ட மனநோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 46 மனநல நோயாளிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 ஆயிரத்து 300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com