திருத்துறைப்பூண்டியில் காணும் பொங்கலையொட்டி திருமணமாகாத கன்னிப் பெண்களின் குப்பிவிடும் நிகழ்ச்சியில் ஏறாளமானோர் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மங்களநாயகிபுரம் கிராமத்தில் நடைபெற்ற காணும் பொங்கல் விழாவில், திருமணமாகாத கன்னிப் பெண்கள் ஆற்றில் குப்பிவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. காணும் பொங்கலன்று பெண்கள் அனைவரும் சேர்ந்து ஆற்றங்கரை படித்துறை அருகில் பாரம்பரிய முறைப்படி பானையில் பொங்கல் வைத்தும் பழங்கள் வைத்தும் வழிபாடு செய்தனர்.
பின்னர் ஒருவாரத்திற்கு முன்பாக சாணத்தில் செய்து வைத்திருந்த குப்பி, மற்றும் பழங்கள் ஆகியவற்றை பெண்கள் ஆற்றில் மூழ்கி நீரில் விட்டனர். இதைத் தொடர்ந்து கேக் வெட்டியும் நடனமாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர். இது போன்று காணும் பொங்கலன்று கன்னிப் பெண்கள் வழிபாடு செய்வதால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.