"உடல்களை வைக்கும் தண்டவாளம் சூடேறி உருகிவிட்டது!" - மின் மயான ஊழியர் கண்ணகி

"உடல்களை வைக்கும் தண்டவாளம் சூடேறி உருகிவிட்டது!" - மின் மயான ஊழியர் கண்ணகி
"உடல்களை வைக்கும் தண்டவாளம் சூடேறி உருகிவிட்டது!" - மின் மயான ஊழியர் கண்ணகி
Published on

கொரோனா கொடுங்காலகட்டத்திலும் எந்த முகச்சுளிப்பும் இல்லாமல் தகனமேடையில் உடல்களை எரியூட்டும் வேலைகளை செய்துவருகிறார் திருவண்ணாமலையைச் சேர்ந்த கண்ணகி என்ற பெண்மணி.

தான் செய்யும் வேலை மற்றவர்கள் பார்வையில் தாழ்வாக தெரிந்தாலும், தனது பணி மிகவும் உயர்வானது என்று கூறும் கண்ணகி, திருவண்ணாமலை நகராட்சி சார்பில் செயல்படும் எரிவாயு தகனமேடையில், இறந்தவர்களின் உடல்களை எரியூட்டும் வேலையைச் செய்து வருகிறார். எந்த மனச்சுணக்கமும், முகச்சுளிப்பும் இல்லாமல் உடல்களை எரியூட்டும் வேலையை 9 ஆண்டுகளாகச் செய்துவருகிறார் .

கடந்த 9 ஆண்டுகளில் 2,000-க்கும் அதிகமான உடல்களை தகனம் செய்துள்ள அவர், தனது அர்ப்பணிப்புக்காக 2020 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் அவ்வையார் விருதை பெற்றவர். 9 ஆண்டுகளில் எத்தனையோ தகனங்களை பார்த்திருந்தாலும், கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி, தினசரி வரும் சடலங்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிவிட்டது என்கிறார், கண்ணகி.

தினசரி உடல்கள் எரிக்கப்படுவது அதிகரித்துள்ளதால் உடல்களை வைக்கும் தண்டவாளம் சூடேறி உருகிவிட்டதாக கூறும் இவர், தண்டவாளம் பழுதால் வெளியே வைத்து உடல்களை எரிக்கும் பணிகளை, தனது உதவியாளர்கள் மூலம் செய்து வருகிறார்.

இறந்தவரின் கண்ணியம் குறையாமல், மரியாதையுடன் தகனம் செய்வதை ஒரு சேவையாக எண்ணிச்செய்யும் கண்ணகி போன்றோருக்கு தலைவணங்கத்தான் வேண்டும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com