``உங்கள் வழிநடத்தலை இந்த நாடு எதிர்பார்க்கிறது"- பொதுக்குழுவில் ஸ்டாலினிடம் கூறிய கனிமொழி

``உங்கள் வழிநடத்தலை இந்த நாடு எதிர்பார்க்கிறது"- பொதுக்குழுவில் ஸ்டாலினிடம் கூறிய கனிமொழி
``உங்கள் வழிநடத்தலை இந்த நாடு எதிர்பார்க்கிறது"- பொதுக்குழுவில் ஸ்டாலினிடம் கூறிய கனிமொழி
Published on

“மு.க.ஸ்டாலினின் வழிநடத்தலை இந்த நாடு எதிர்ப்பாக்கிறது” என்று திமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எம்.பி. கனிமொழி பேசியுள்ளார்.

திமுக-வின் 15வது பொதுக்குழுவில் துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி. கனிமொழி, பொதுக்குழு மேடையில் பேசுகையில், “1949-ம் ஆண்டில் கழகத்தை தொடங்கிய போது அண்ணா அவர்கள் இந்த கழகத்தின் செயல்கள் பெரியாரே போற்றும் வகையில் இருக்க வேண்டும் என்று உரைத்தார். அதே போல் சுயமரியாதை திருமணச்சட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அண்ணா அவர்கள் வழியில், அவருக்கு பிறகு பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதியும், கழகத்தின் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து செயல்பட்டார்.

பலரின் ஆசையை பொய்யாக்கும் வகையில் வெற்றிடத்தை காற்றாக இல்லாமல் ஆழிப்பேரலையாக நிரப்பியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரசியல் வெற்றியை பெற்று, இன்று சனாதன சக்திகளிடம் இருந்து கொள்கைகளை காக்க போராடி வருகிறார். இந்தப் போராட்டத்தில் இணைந்துப் போராட வாய்பளித்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞர்‌ இல்லாத இடத்தில் நாங்களும் இந்த நாடும் உங்களை வைத்துப் பார்க்கிறது. உங்களின் வழிநடத்தலை இந்த நாடு எதிர்ப்பாக்கிறது” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com