ஏவுகணை நாயகன் அப்துல்கலாம் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த திமுக எம்.பி. கனிமொழி

ஏவுகணை நாயகன் அப்துல்கலாம் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த திமுக எம்.பி. கனிமொழி
ஏவுகணை நாயகன் அப்துல்கலாம் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த  திமுக எம்.பி. கனிமொழி
Published on

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வீட்டிற்கு திமுக எம்.பி கனிமொழி திடீர் விசிட் செய்துள்ளார்.

இந்தியாவின் கடைக்கோடியான ராமேஸ்வரத்தில் பிறந்து ‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்று அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்தவர் அப்துல் கலாம். இளைஞர்களின் ரோல் மாடலாக திகழும் கலாம் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சியினரும் நேசிக்கப்படும் தலைவராக இருந்தவர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி மேகாலயாவில் உடல்நலக்குறைவால் கலாம் மறைந்தபோது அவரது மறைவிற்கு இந்தியாவே கண்ணீர் வடித்தது. கலாம் பிறந்த ராமேஸ்வரத்திலேயே உடல் அடக்கம் செய்யப்பட்து.

அங்கு வரும் தலைவர்களும், பொதுமக்களும் நினைவிடம் செல்வது மட்டுமல்லாமல் அவர் பிறந்த ராமேஸ்வர இல்லத்திற்கும் சென்று வருகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக எம்.பி கனிமொழி கலாம் வீட்டிற்கு சென்று அவரது உறவினர்களை சந்தித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ”மிகச் சிறந்த அறிவியல் அறிஞரான திரு. கலாம் அவர்களுக்கும், தலைவர் கலைஞர் அவர்களுக்கும் நல்ல நட்பு இருந்தது. அவர் மிகப்பெரிய சாதனைகள் புரிய நமது இளைஞர்களை ஊக்கப்படுத்தியவர். ராமேஸ்வரத்தில் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் திரு..பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் இல்லத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினேன்” என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com