காஞ்சிபுரம்: ”ஒரிஜினல் எனச் சொல்லி போலியை விற்கிறாங்க”- அழிவை நோக்கிச்செல்லும் பட்டு நெசவுத் தொழில்

இந்திய பட்டுச் சேலைகளில் தனித்துவம் கொண்ட காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளுக்கு உலகம் முழுவதும் தனிச்சந்தை உள்ளது.

கோர்வை ரகங்களுக்காக உலகப்புகழ் பெற்ற காஞ்சிபுரம் சேலைகளுக்கு புவிசார் குறியீடு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள கைத்தறி நெசவை நம்பி இருக்கும் நெசவாளர்களின் எண்ணிக்கை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. 40 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் தற்போது பட்டு கைத்தறி நெசவுத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

silk sarees
silk sareespt desk

அதிலும், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், போலி பட்டு, ஜரிகைகளை வைத்து நெய்து, வெறும் 2 ஆயிரம் ரூபாயில் தயாரித்து 10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரிஜினல் காஞ்சிபுரம் பட்டுச்சேலை என்று சொல்லி விற்பனை செய்வதாக நெசவாளர்கள் புகார் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் பட்டுச் சேலைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தாலும் பட்டுச் சேலை சந்தையில் காஞ்சிபுரம ;பட்டு போலவே கிடைக்கும் போலிகளால் கைத்தறி நெசவுத் தொழில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. காஞ்சிபுரத்திற்கு வந்தால் ஒரிஜினல் சேலைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வரும் பொதுமக்களுக்கு மேலும் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது என்றார் நெசவாளர் இந்திரன்.

weaver
weaverpt desk

காஞ்சிபுரம் கைத்தறித் துறை துணை இயக்குனர் ஆனந்திடம் இதுபற்றி கேட்டதற்கு, கைத்தறி ரகங்களை விசைத் தறிகளில் உற்பத்தி செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். ஒரிஜினல் பட்டு எனக்கூறி விசைத்தறியில் பட்டு நெய்து மக்கள் மத்தியில் விற்பனை செய்வதை துறைசார்ந்த அதிகாரிகள் தடுத்தால் மட்டுமே, தங்களின் வாழ்வாதாராம் சீராகும் என கைத்தறி நெசவாளர்கள் தெரிவித்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com