காஞ்சிபுரம்: ரசாயன ஆலையால் மக்களுக்கு மூச்சுத் திணறல்? - அதிகாரிகள் ஆய்வு

காஞ்சிபுரம்: ரசாயன ஆலையால் மக்களுக்கு மூச்சுத் திணறல்? - அதிகாரிகள் ஆய்வு
காஞ்சிபுரம்: ரசாயன ஆலையால் மக்களுக்கு மூச்சுத் திணறல்? - அதிகாரிகள் ஆய்வு
Published on

ரசாயன ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு புகையால் பொது மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து  அதிநவீன கருவிகள் கொண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சின்னையன் சத்திரத்தை அடுத்துள்ள சிங்கடிவக்கம் பகுதியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சிங்கடிவக்கம் அரசுப் பள்ளி அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தனியார் ரசாயன தொழிற்சாலையில் போதுமான பராமரிப்பு இல்லாத காரணத்தால் ரசாயன கழிவுகள் உள்ளிட்டவை வெளியேறி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக அங்கு செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் ரசாயன புகை மற்றும் ரசாயனக் கழிவுகள் வெளியேறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்துள்ளனர். இருந்தும் அந்த மனுவின் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரசாயன ஆலையை ஒட்டியுள்ள அரசுப் பள்ளியில், மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ரசாயன ஆலையில் இருந்து திடீரென்று ,வெளியேறிய புகையால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளனர். இதனையடுத்து இக்கிராம மக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை கிண்டி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அதிநவீன கருவிகள் கொண்டு காற்றில் கலந்துள்ள மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின் முடிவில் காற்றில் மாசு கலந்துள்ளதா இல்லையா என்பது குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன், காரணமாக தற்போது அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com