காஞ்சிபுரம்: உயிரிழந்தவர்களின் உடலை உடனடியாக அகற்ற நோயாளிகள் கோரிக்கை

காஞ்சிபுரம்: உயிரிழந்தவர்களின் உடலை உடனடியாக அகற்ற நோயாளிகள் கோரிக்கை
காஞ்சிபுரம்: உயிரிழந்தவர்களின் உடலை உடனடியாக அகற்ற நோயாளிகள் கோரிக்கை
Published on

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கொரோனா நோயாளியின் சடலத்தை அகற்ற பலமணி நேரம் ஆவதால் அருகில் உள்ள நோயாளிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளை அதிகளவில் கையாளும் மருத்துவமனைகளில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைவும் ஒன்று. இங்கு கொரோனா நோயாளிகளுக்காக 115 சாதாரண படுக்கைகளும், 235 ஆக்சிஜன் படுக்கைகளும், 25 ஐ.சி.யு., படுக்கைளும் உள்ளன. இந்த படுக்கைகள் அனைத்தும் பெரும்பாலும் நிரம்பியுள்ளன. இவற்றில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் பலர் சிகிச்சை பலனின்றி தினமும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த நோயாளிகளின் சடலம் அதே கட்டிலில் பலமணி நேரம் இருக்கிறது. சடலத்தை உடனடியாக அகற்ற மருத்துவமனை ஊழியர்கள் வருவதில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறோம் என மற்ற நோயாளிகள் தெரிவிக்கின்றனர். அதனால் இறந்த சடலத்தை உடனடியாக எடுத்து செல்ல காஞ்சிபுரம் மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com