அத்திவரதரை காண அதிகரிக்கும் கூட்டம்.. வயதானோருக்கு ஆட்சியர் வேண்டுகோள்..!

அத்திவரதரை காண அதிகரிக்கும் கூட்டம்.. வயதானோருக்கு ஆட்சியர் வேண்டுகோள்..!
அத்திவரதரை காண அதிகரிக்கும் கூட்டம்.. வயதானோருக்கு ஆட்சியர் வேண்டுகோள்..!
Published on

கர்ப்பிணிகள், வயதானவர்கள் உள்ளிட்டோர் வார இறுதி மற்றும் விடுமுறை நாள்களில் அத்திவரதர் தரிசனத்துக்கு வருவதைத் தவிர்க்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வயதானவர்கள், கர்ப்பிணிகளுக்கு உரிய வசதிகள் இல்லை என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுவதில் உண்மையில்லை என்று தெரிவித்தார்.

கோயிலுக்குள்ளே செல்வதற்கான நேரம் இரவு 9 மணி வரை குறைக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு, அத்திவரதர் அலங்காரம், கோயில் துப்புரவுப் பணிகள் போன்ற நடைமுறை தேவைகளுக்காக நேரம் குறைக்கப்பட்டதாக ஆட்சியர் பொன்னையா கூறினார். பேருந்துகள், ஆம்புலன்ஸ், கழிவறைகள் என பக்தர்களுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய ஆட்சியர், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com