“தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” - கமல் தரப்பில் முறையீடு

“தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” - கமல் தரப்பில் முறையீடு
“தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” - கமல் தரப்பில் முறையீடு
Published on

தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் கமல்ஹாசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் வழக்கை ரத்து செய்வது தொடர்பான மனுவை விடுமுறை கால அமர்வில் அவசர வழக்காக விசாரிக்க இயலாது என நீதிபதி தெரிவித்துவிட்டார். வேண்டுமென்றால் முன்ஜாமீன் கோரி கமல் மனு தாக்கல் செய்யலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். 

முன்னதாக, அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் பேசிய கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவன் பெயர் கோட்சே என பேசியிருந்தார். கமலின் இந்த பேச்சுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவரக்குறிச்சி காவல்நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே டெல்லி நீதிமன்றத்தின் கமல்ஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com