கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் ஆறுதல் கூறினார். விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், 108 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் கமல்ஹாசன்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மதுக்கடைகளை உடனே மூடினால் மட்டும் எல்லாம் முடிந்துவிடும் என்பது தவறான கருத்து. அது சரியாகாது.
சாலை விபத்து நடைபெறும் என்பதால் போக்குவரத்தை நிறுத்த முடியாது. குறைவாக மது அருந்துங்கள் என்று அறிவுரை கூறும் இடங்கள் மதுக்கடை அருகிலேயே வேண்டும். மருந்து கடைகளை விட டாஸ்மாக் கடைகள் அதிகம் உள்ளன.