தமிழக பாஜகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட கல்யாணராமன், திருச்சி சூர்யா.. பின்னணி என்ன?

பா.ஜ.க சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளரான கல்யாணராமனும் பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவாவும் அதிரடியாகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழிசை, அண்ணாமலை
தமிழிசை, அண்ணாமலைpt web
Published on

பா.ஜ.க சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளரான கல்யாணராமனும், பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவாவும் அதிரடியாகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கும் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது, நேற்று நடந்த பாஜக மையக் குழுக் கூட்டத்துக்குப் பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது விரிவாகப் பார்ப்போம்.

திருச்சி  சூரியா சிவா
திருச்சி சூரியா சிவா

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி முறிவு குறித்த கருத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் முன்னாள் கவர்னர் தமிழிசைக்கும் இடையே முட்டல் மோதல் உண்டானது.

தமிழிசைக்கு ஆதரவாக நேரடியாகவும் மறைமுகமாகவும் சீனியர்கள் சிலர் களமிறங்க, அண்ணாமலைக்கு ஆதரவாக இளம் பாஜக நிர்வாகிகள் களம் இறங்கினர். சமூக வலைதளங்களில் ஒருவரை, ஒருவர் வார்த்தைகளால் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இந்தநிலையில், தமிழிசைக்கு ஆதரவாக கல்யாணராமன் கருத்துத் தெரிவித்திருந்தார்.

தமிழிசை, அண்ணாமலை
தமிழிசையைக் கண்டித்த அமித்ஷா, ESCAPE ஆன அண்ணாமலை; என்ன நடக்கிறது பாஜகவில்?

அவர், “தேர்தல் தோல்வி தொடர்பாக தமிழிசை கூறியது சரியானது. பொய் சொல்வது அண்ணாமலை ரத்தத்திலேயே ஊறிவிட்டது. பெரிய தலைவராக காட்டிக்கொள்ளவே எடப்பாடிக்கு எதிரான அரசியலை அண்ணாமலை செய்கிறார். அண்ணாமலையை முன்னிலைப்படுத்த, பிற பாஜக தலைவர்களை சிறுமைப்படுத்த 2 வார் ரூம்கள் செயல்படுகின்றன’’ என்றார்.

கல்யாணராமன்
கல்யாணராமன்

இந்தநிலையில், சமூக விரோதிகள் பலருக்கு தற்போது பாஜகவில் பொறுப்புகள் அதிகமாக வழங்கியிருப்பதாக தமிழிசை ஒரு நேர்காணலில் கருத்துத் தெரிவிக்க, அவர் மீதான அண்ணாமலை ஆதரவாளர்களின் அட்டாக் இன்னும் அதிகமானது. தமிழிசையின் கருத்தை கடுமையாக விமர்சனம் செய்து தன் எக்ஸ் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார் திருச்சி சூர்யா அவர், ``குற்ற பின்னணி உள்ளவர்கள் பாஜவில் சேர்க்கப்பட்டது என்பது தங்களுடைய பரிந்துரையில் மாநிலத் தலைவர் ஆக்கப்பட்ட எல்.முருகன் காலகட்டத்தில்தான். வேண்டுமென்றால் நான் பட்டியல் தருகிறேன்.

திருச்சி சூர்யா
திருச்சி சூர்யா

கட்சியின் வளர்ச்சியையும், தனி நபருக்கு கிடைக்கும் புகழையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி புலம்புகிறீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது. தாங்கள் மாநில தலைவராக இருந்தபோது கட்சியில் சேர்வதற்கு கூட ஆட்கள் முன்வரவில்லை என்பதே நிதர்சனம்’’ என விமர்சனம் செய்திருந்தார்...

தமிழிசை, அண்ணாமலை
பாஜகவை பின்னுக்கு இழுக்கிறாரா? - அண்ணாமலை Vs தமிழிசை + சீனியர்ஸ்.. முற்றும் மோதல்; பின்னணி என்ன?

அதற்குப் பிறகு, டெல்லி தலைமை இருவரையும் கண்டித்ததாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து, பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசையை நேரடியாகச் சென்று சந்திக்க இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாகப் பார்க்கப்பட்டது.

ஆனால், நேற்று நடந்த பாஜக மையக் குழுக் கூட்டத்திலும் மீண்டும் இந்த விவகாரம் எழுப்பப்ட்டுள்ளது., மையக்குழுக் கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த நிர்வாகிகளான எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மையக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. மூத்த தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

தமிழிசை
தமிழிசைபுதிய தலைமுறை

அப்போது, பாஜக தலைவர் தமிழிசை, ”கட்சியினருக்கு எதிராக சமூக வலைதளங்களில், பொது வெளியில் விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக பொதுவெளியில் கருத்துத் தெரிவித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற குரல் எழுந்துள்ளது. கடைசியில், திருச்சி சூர்யா சிவா, கல்யாண ராமன் என இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.

தமிழிசை, அண்ணாமலை
’சொன்னது இதுதான்..’ மேடையில் அமித் ஷா கண்டித்ததாக வைரல் ஆன வீடியோ.. விளக்கமளித்த தமிழிசை!

திருச்சி சூர்யா சிவா ஏற்கெனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டு சமீபத்தில்தான் இணைக்கப்பட்டார். அவர் இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில், `அண்ணன் அண்ணாமலை அவர்களால் ஈர்க்கப்பட்டுதான் நான் தமிழ்நாட்டு பாஜகவில் இணைந்தேன். என் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் தலைவனை பேசியதற்கு நான் பதில் அளித்தேன், அதற்காக என்மேல் நடவடிக்கை என்றால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.

எந்த நிலையிலும் அண்ணன் அண்ணாமலை குடும்பத்தில் ஒருவனாகவே இருப்பேன். இனியும் தமிழ்நாடு பாஜகவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சுயமரியாதை முக்கியம். எதன் பொருட்டும் அதை கைவிட முடியாது. என் மீது அன்பு கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்’’ எனக் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

அதேபோல, ஓராண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள கல்யாணராமனும், “என்னை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக தரப்பட்டுள்ள அறிவிக்கை துரதிர்ஷ்டவசமானது'' என தன் எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com