கல்வராயன் மலையை சுற்றுலாத்தலமாக தரம் உயர்த்துவது குறித்து முதலமைச்சரின் உத்தரவு பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
“கள்ளச்சாராய மலை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, அப்பெயரில் விமர்சிக்கப்படும் கல்வராயன் மலையை சுற்றுலாத்தலமாக மாற்ற அரசு முன்வருமா?” என சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், “கல்வராயன் மலை என்பது மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலம். அதனை மேம்படுத்துவது அவசியம். இதுகுறித்து அரசு நிதிநிலைக்கு ஏற்ப முதலமைச்சரின் உத்தரவு பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறி உறுதியளித்தார்.