“என் முதல் நன்றி தமிழ்நாடு அரசுக்குத்தான்” கல்பனா சாவ்லா விருதுபெற்ற முத்தமிழ்ச்செல்வி நெகிழ்ச்சி!

சுதந்திரதின விழாவில் கல்பனா சாவ்லா விருதுபெற்ற எவரஸ்ட் வீராங்கனை முத்தமிழ்ச்செல்வி, “நான் எவரஸ்ட் சிகரம் ஏறுவதற்கு தமிழக அரசு மிகப்பெரிய அளவிற்கு உதவியுள்ளது” என பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஜோயல்பட்டியை சேர்ந்த 34 வயது பெண் முத்தமிழ்ச்செல்வி.

முத்தமிழ்ச்செல்வி, தமிழ்நாடில் எவரஸ்ட் சிகரம் ஏறிய முதல் பெண்
முத்தமிழ்ச்செல்வி, தமிழ்நாடில் எவரஸ்ட் சிகரம் ஏறிய முதல் பெண்Twitter

இவர் சமீபத்தில் எவரஸ்ட் சிகரம் ஏறி “தமிழ்நாடிலேயே எவரஸ்ட் சிகரம் ஏறிய முதல் பெண்” என்ற சாதனையை படைத்தார். இவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பண உதவியும் வழங்கப்பட்டது.

முத்தமிழ்ச்செல்வி
“ஏறுவதைவிட இறங்குவதுதான் சிரமமாக இருந்தது” – எவரெஸ்ட் சிகரம் தொட்ட ராஜசேகர் பச்சை பேட்டி!

இதனையடுத்து இன்று நடைப்பெற்ற சுதந்திர தினவிழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடமிருந்து ‘கல்பனா சாவ்லா விருது’ பெற்றார் மலையேற்ற வீராங்கனை முத்தமிழ்ச்செல்வி.

"கல்பனா சாவ்லா விருது ”
"கல்பனா சாவ்லா விருது ” Twitter

இதுகுறித்து அவர் நம்மிடையே கூறுகையில், “கல்பனா சாவ்லா விருதினை பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் முதல் நன்றியை தமிழக அரசுக்குத்தான் சொல்ல வேண்டும்.

நான் எவர்ஸ்ட் ஏறுவதற்காக தமிழக அரசு சார்பில் 25 லட்சம் வரை எனக்கு கொடுத்து உதவி செய்திருக்கின்றனர். கிட்டதட்ட 50 லட்சம் வரை எனக்கு செலவானது. தமிழ்நாடு அரசின் உதவி எனக்கு கிடைக்கவில்லை என்றால் மிகவும் சிரமமாக இருந்திருக்கும். எவரெஸ்ட் ஏறமுடியாமல் கூட போயிருக்கலாம். தமிழ்நாடு அரசின் உதவியால்தான் இன்று உங்கள் முன்பு என்னால் இப்படியொரு எவரஸ்டராக என்னால் நிற்க முடிகிறது” என்று தெரிவித்தார்.

- Jenetta Roseline S

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com