சங்கராபுரம் அருகே கனமழை காரணமாக 300க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் கிராமத்தில் கருத்த பிள்ளை மற்றும் பழனி அஞ்சலை என்பவர்களுக்கு சொந்தமான ஆட்டுப்பண்ணை இருந்து வருகிறது. இவர்கள் ஏரி புறம்போக்கு அருகே இந்த ஆடுகளை பண்ணை அமைத்து பெட்டி வைத்து வளர்த்து வந்துள்ளனர்.
.
இந்நிலையில். சங்கராபுரம் பகுதியில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாகவும் நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகப்படியாக சங்கராபுரம் பகுதியில் 9 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
இந்த கனமழையால் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆடுகள் கிராமத்தை தாண்டி உள்ள எஸ்.வி.பாளையம், ஊரணி ஆகிய கிராமங்கள் வரை ஓடைகள் வழியாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
சங்கராபுரம் அருகே ஒரே நாளில் மழை வெள்ளத்தில் 300க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.