கள்ளக்குறிச்சி| கண்ணீர் ஊர்வலம்.. மழையை பொழிந்த வானம்! விஷச்சாராயத்தால் இறந்தவர்களின் உடல்கள் தகனம்!

கள்ளக்குறிச்சியில் இறந்த உடல்களின் இறுதி ஊர்வலம் முடிந்து 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
கள்ளச்சாராயம் உயிரிழப்பு
கள்ளச்சாராயம் உயிரிழப்பு pt web
Published on

கள்ளக்குறிச்சியில் இறந்த உடல்களின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

கள்ளக்குறிச்சி, இன்று உலகமே உச்சரிக்கும் ஒரு கிராமம். காரணம் விஷசாரயம் அருந்தி ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரின் இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள வந்த உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் என்று பலரும், அதே விஷசாராயத்தை அருந்தியுள்ளனர். இதில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில், கருணாபுரம் பகுதி மக்கள் முழுவதும் இச்சம்பவத்தல் சோகத்தில் மூழ்கி இருக்கின்றனர். எங்கும் அழுகுரல் கேட்டப்படி இருக்கிறது. பல தலைவர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதில் முதலாவதாக உயிரிழந்த சுரேஷ் , பிரவின் ஆகியோரின் இறுதி சடங்குகள் முடிக்கப்பட்டு கோமுகி நதிக்கரையில் தகனம் செய்யப்பட்டது.

மேலும் அவ்விடத்தில், 21 உடல்கள் தகனம் செய்யவும்,அருகில் 7 உடல்கள் புதைக்கப்படவும் இருக்கும் ஏற்பாட்டை நகராட்சி நிர்வாகம் செய்தது.

இதனிடைய கள்ளக்குறிச்சி பகுதி முழுவதும் சிறிது நேரம் கனமழை பெய்தது. இதனால், உடல்களை தகனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இறுதி ஊர்வலத்தின் போது அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க சென்றனர்.

பின்னர் மழையால் தகனம் செய்யப்பட இருந்த இடங்கள் ஈரமானதால் சிரமத்திற்கு இடையே பணிகள் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com