‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி கைது

‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி கைது
‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி கைது
Published on

கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

கடந்த 2009 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவியாக இருந்தபோது போராட்டத்தில் ஈடுபட்டதாக திவ்ய‌ பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மாணவி திவ்ய பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனிடையே நீதிமன்ற விசாரணைக்கு வராத காரணத்தால் திவ்ய பாரதி கைது செய்யப்பட்டதாக திவ்ய பாரதியின் வழக்கறிஞர் கனகவேல் தெரிவித்தார்.

முன்னதாக, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரம் கொடுத்த வளர்மதி என்ற கல்லூரி மாணவி கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இந்நிலையில் திவ்ய பாரதியும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com