வேட்டையன் | “காட்சிகளை நீக்காவிட்டால் போராட வேண்டிய சூழல் வரும்” - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

வேட்டையன் திரைப்படத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு பள்ளி பற்றி தவறாக சித்தரிக்கப்பட்ட காட்சியை நீக்காவிட்டால் மக்களுடன் சேர்ந்து போராட வேண்டிய சூழல் வரும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
வேட்டையன், கடம்பூர் ராஜூ
வேட்டையன், கடம்பூர் ராஜூpt web
Published on

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தில் காந்திநகர் அரசு பள்ளி குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த காட்சியை நீக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என கடம்பூர் ராஜூ எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த காட்சிகளின் மூலம் அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறி ஆகிவிடும். அடுத்த நிலையில் உள்ள மாணவர்கள் அந்தப் பள்ளியில் சேருவதற்கு தயக்கம் காட்டுவார்கள். பெற்றோர்களிடமும் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆசிரியர்களுக்கும் அது வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வேட்டையன், கடம்பூர் ராஜூ
வேட்டையன் விமர்சனம் : சமூக அக்கறை புரிகிறது... ஆனால் குறி சரியா இருக்க வேண்டாமா?

இதை ஒரு சாதாரண காட்சியாக நினைக்காமல், சமுதாயத்தில் தவறான தாக்கத்தை உணர்ந்து காட்சியை படக்குழுவினர் உடனடியாக நீக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com