சிங்கப்பூர் தேசிய நூலக வாசிப்பு விழாவில் கபிலன் வைரமுத்து, சோ தர்மன் நூல்கள் தேர்வு!

சிங்கப்பூர் தேசிய நூலக வாசிப்பு விழாவில் கபிலன் வைரமுத்து, சோ தர்மன் நூல்கள் தேர்வு!
சிங்கப்பூர் தேசிய நூலக வாசிப்பு விழாவில் கபிலன் வைரமுத்து, சோ தர்மன் நூல்கள் தேர்வு!
Published on

சிங்கப்பூர் தேசிய வாசிப்பு இயக்கத்தின் முக்கியமான நிகழ்வான வாசிப்பு விழாவில் கபிலன் வைரமுத்து எழுதிய மெய்நிகரி, அம்பறாத்தூணி, சோ தர்மன் எழுதி சாகித்ய அகாடமி விருது வென்ற ’சூல்’ ஆகிய நூல்கள் இடம் பெறுகின்றன.

 மெட்ராஸ் படத்தில் ‘ஆகாயம் தீ பிடிச்சா’, தெகிடி படத்தில் ‘விண்மீன்’ இமைக்கா நொடிகள் படத்தில் ‘நீயும் நானும் அன்பே’, ஐ படத்தில் ‘மெர்சலாயிட்டேன்’ என பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை எழுதிய வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதுவதோடு தீவிர எழுத்துப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் எழுதிய மெய்நிகரி,அம்பறாத்தூணி நூல்கள்தான் சிங்கப்பூர் தேசிய வாசிப்பு இயக்கத்தில் வாசிப்பு விழாவில் இடம்பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்கவிருக்கின்றன.

நான்கு அதிகாரத்துவ மொழிகளில் சிங்கப்பூர் வாசகர்களின் வாசிப்பை ஊக்குவிக்க சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் சிறப்பு நிகழ்வுதான் சிங்கப்பூர் வாசிப்பு விழா. கபிலன் வைரமுத்துவின் மெய்நிகரி என்ற நாவலும் அம்பறாத்தூணி என்ற சிறுகதைத் தொகுப்பும் (இரண்டாவது), சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர், சோ தர்மனின் சூல் என்ற நாவலும் வாசிப்பு விழாவின் சிறப்பு அம்சங்களாக இடம் பெறுகின்றன. நூல்கள் மூலமும் அவற்றைச் சுற்றிய உரையாடல்கள் மூலமும் கற்றலை ஊக்குவிப்பதற்கு பொருத்தமான நூல்களாக இவை அமைந்துள்ளன’ என்று சிங்கப்பூர் அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தொலைக்காட்சி ஊடகத்தின் பணியாற்றும் ஐந்து இளைஞர்களின் அனுபவங்கள் வழி நிகழ்கால காட்சி ஊடகத்தின் பின்னணியை விவரிக்கும் மெய்நிகரி கபிலன்வைரமுத்துவின் மூன்றாவது நாவல். இது 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது. பதினைந்து சிறுகதைகளைக் கொண்ட அம்பறாத்தூணி கபிலன் வைரமுத்துவின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பு. இது கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது. வெளிவந்த முதல் மாதத்திலேயே ஆயிரம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com