'வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானதல்ல என்ற அவரது குடும்பத்தினர், பாமக மீது சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் தாய், சகோதரி மீனாட்சி, மகன் கனலரசன் உள்ளிட்டோர் சென்னையில் செய்தி யாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறும்போது, ‘காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானது அல்ல, அதில் சந்தேகம் உள்ளது’ என்று தெரிவித்தனர்.
காடுவெட்டி குரு மகன் கனலரசன் கூறும்போது, ’’ என் தந்தையை கட்சிக்காக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர். வன்னியர் சங்கத்தையும், பாமகவையும் வளர்க்க தந்தை கடுமை யாக பாடுபட்டார். ஆனால், என் தந்தை மருத்துவமனையில் இருந்தபோது, யாரும் உதவி செய்ய வர வில்லை. என் தந்தையை அழிக்க வேண்டும் என்று 30 வருடமாக சதி செய்திருக்கிறார்கள்.
பாமக தலைமையால் எனக்கு (கனலரசன்) ஏதாவது நடந்துவிடுமோ என்று பயப்படுவதாக என் அம்மா கருதுகிறார். என் தந்தையின் மரணம் இயற்கையானதல்ல, ஸ்லோபாய்சன் கொடுக்கப் பட்ட து என்பதற்கான ஆதாரம் இருக்கிறது. அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, ‘குரு வுக்கு செலவு பண்றது வேஸ்ட்டு, அவருக்கு எதுக்கு செலவு பண்ணணும். இறந்தா இறந்துட்டு போகட்டும், விட்டுரலாம்னு சின்னய்யா (அன்பு மணி)வும் அவர் உறவினர் டாக்டர் ஒருவரும் சொன்னார்கள்.
’வன்னியர் சங்கத்தின் சார்பில் பினாமியாக வாங்கப்பட்ட சொத்து காரணமாகத்தான் பிரச்னையா?’ என்று கேட்கிறீர்கள். அதுபற்றி எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு பூர்வீகச் சொத்துமட்டும்தான் இருக்கிறது.
பாட்டாளி கட்சியைச் சேர்ந்தவர்கள், என் தந்தையை சூழ்நிலைக் கைதியாக வைத்திருந்தனர். அன்புமணியின் வளர்ச்சிக்கு அவர் தடையாக இருப்பதாக, கருதினார்கள். அதனால் மற்றக் கட்சியினருக்கு அவரை எதிரியாக மாற்றினார்கள். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிரியாக்கினார்கள். பாமக தலைமையை, பெரும்பாலான வன்னியர்கள் ஆதரிக்கிறார்கள் என்பது உண்மையல்ல. வன்னியர்கள் அனைத்து கட்சியிலும் இருக்கி றார கள். வன்னியர்கள், பாமகவுக்கு இந்தத் தேர்தலில் பதில் சொல்லுவார்கள்’’ என்றார்.
குருவின் சகோதரி மீனாட்சி கூறும்போது, ‘’இரண்டரை கோடி வன்னியர்களுக்கும் தமிழக காவல்துறைக்கும் நாங்கள் வேண்டுகோள் வைக்கி றோம். நீங்கள்தான் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்’’ என்றனர்.