கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன் - கே.டி.ராகவன் அறிவிப்பு

கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன் - கே.டி.ராகவன் அறிவிப்பு
கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன் - கே.டி.ராகவன் அறிவிப்பு
Published on
தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளர்களில் ஒருவரான கே.டி.ராகவன், தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளரும், வழக்கறிஞருமான கே.டி.ராகவன் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கே.டி.ராகவன் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்ட பதிவில், ''தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடமாக எந்த ஒரு பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளிவந்ததை அறிந்தேன். என்னையும் என் கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இன்று மரியாதைக்குரிய மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்'' என அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com