மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் 21-வது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் முன்பு தொடங்கிய இந்த மாநாட்டில் தமிழக மக்களின் பிரச்னை, தேசிய அளவில் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக நீட் தேர்வு ரத்து, சிறு குறு தொழில்களை பாதாக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு 3000 உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல், தமிழக அரசியல் நிலவரம், பா.ஜ.க வுக்கு எதிரான இயக்கங்களை வலுவாக நடத்த வேண்டும் என விவாதிக்கப்பட்டதாக கட்சியினர் தெரிவித்தனர். இறுதி நாளான இன்று, மாநாட்டில் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதில் 15 பேர் கொண்ட செயற்குழு தேர்வு என மொத்தமாக 80 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், சு.வெங்கடேசன் எம்.பி, கே.பாலபாரதி, ஜி.சுகுமாறன், கே.சாமுவேல்ராஜ், எஸ்.கண்ணன் ஆகியோர் மாநில செயற்குழுவுக்கு புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல் கட்சி விதிகள்படி 72 வயது கடந்த நபர்கள் பொறுப்புகளில் இருக்க கூடாது என்ற அடிப்படையில், ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், அ.சவுந்திரராஜன் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F3132297390392490%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>