மீனவர் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்

மீனவர் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்
மீனவர் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்
Published on

மீனவர் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் பிரிட்ஜோ படுகொலையைக் கண்டித்து, தங்கச்சிமடத்தில், மீனவர்கள் போராட்டம் நீடித்துவருகிறது. பிரிட்ஜோவின் உடலைப் பெற மறுத்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், அவரது குடும்பத்தினரும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தங்கச்சிமடம் சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்க அனைத்து நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கும் என தெரிவித்தார் .மீனவர்கள் விடுதலைக்காக நடவடிக்கை எடுத்தது பாஜக அரசுதான் என்றும் இறந்த மீனவருக்கு இறுதிச்சடங்கை நடத்துங்கள் என்பதே தனது வேண்டுகோள் எனவும் அவர் தெரிவித்தார்.

மீனவர்கள் கோரிக்கை நியாயமானது என்றும் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறினார். மீனவர்கள் உயிரிழப்பு இனி நிகழக் கூடாது. மீனவர் மீது நடத்தப்பட்டத் துப்பாக்கிச்சூடு பற்றி விசாரணை நடக்கும் என இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com