போலி NCC முகாம் விவகாரம்: சிவராமனிடம் 2 துப்பாக்கிகள்.. போலீசார் விசாரணையில் நீதிபதிகள் அதிருப்தி

கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையின் விசாரணை முறையாக இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம், சிவராமன்
சென்னை உயர்நீதிமன்றம், சிவராமன்pt web
Published on

செய்தியாளர் சுப்பையா

போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தை சிபிஐக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ண குமார், நீதிபதி பாலாஜி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை படித்த நீதிபதிகள், அது தொடர்பாக அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். "பள்ளி எப்படி இதற்கு அனுமதி கொடுத்தது" என கேள்வி எழுப்பினர். சட்டப்பணிகள் ஆணைய அறிக்கையில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் நீதிபதிகள் கூறினார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்PT

போலி என்.சி.சி. முகாமில் இருந்த சிவராமனிடம் இரண்டு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்துள்ளன என்றும், அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் என்ன விசாரணை நடத்தினார்கள் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். சிவராமனை பள்ளி நிர்வாகத்துக்கு அறிமுகப்படுத்திய முக்கிய புள்ளியான புவன் என்ற நபரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை எனவும் நீதிபதிகள் வினவினர்.

சென்னை உயர்நீதிமன்றம், சிவராமன்
ஆதார் கார்டு அப்டேட் செய்யலைன்னா செயலிழந்து போகுமா? உண்மை என்ன? விவரம் உள்ளே!

இந்த விவகாரத்தில் காவல்துறையின் விசாரணை முறையாக இல்லை எனக்கூறிய நீதிபதிகள் சிவராமனின் பின்னணி, ஆயுதங்கள் எப்படி கொண்டு செல்லப்பட்டன உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்த வேண்டுமென அறிவுறுத்தினர்.

PT

நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டு விட்டதாகவும், நான்கு மாணவிகளின் பெற்றோர்கள் தங்களுக்கு இழப்பீடு வேண்டாம் என கூறியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போலி என்.சி.சி. முகாம் நடத்திய மற்ற பள்ளிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முகாமில் பங்கேற்க மாணவர்களிடம் 1500 ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும் பணத்திற்காக தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே சிவராமன் எலி மருந்து உட்கொண்டதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கான இழப்பீட்டை வழங்க தனியார் பள்ளிக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார். இது குறித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறிய நீதிபதிகள் விசாரணையை செப்டம்பர் 19 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம், சிவராமன்
’தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணி|பெங்களூரு தொழிலதிபர் வீட்டில் ரெய்டு நடத்திய அதிகாரிகள்.. 4 பேர் கைது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com