சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் கடைகளுக்கு செல்லும் போது,பொதுமக்கள் துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.
உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் சுகாதார முகாம் நடந்தது. இந்த முகாமை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நிர்வாக நீதிபதி C.T.செல்வம் தொடங்கி வைத்தார். விழாவில் நீதிபதிகள் சுந்தர்,பசீர் அகமது,கிருஷ்ணவள்ளி,சுரேஷ் குமார்,நிஷாபானு உள்ளிட்ட நீதிபதிகள் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், மதுரை மாநகராட்சி ஆணையர் அனிஷ் சேகர், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அனைவருக்கும் துணிப் பைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதிகள் ,வழக்கறிஞர்கள்,உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நுழைவு பகுதி, அரசு வழக்கறிஞர் அலுவலகம்,வழக்கறிஞர்கள் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். அப்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி C.T.செல்வம், பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட வளாகமாக, ஏற்கெனவே அறிவித்திருந்தோம்.தொடர்ந்து அதை கடைபிடித்து வருகிறோம்.
மேலும் மக்கள் அனைவரும்,சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் கேரி பைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, துணி பைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும், பிளாஸ்டிக் கேரி பைகள் பூமியில் மக்காமல் இருந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே பிளாஸ்டிக் கேரிபைகளை தவிர்க்க வேண்டும் என்று செய்தியாளர்ளிடம் கூறினார்.